Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பிளேக் நோய் ஆய்வகத்தில் பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு - மருத்துவ கண்காணிப்பில் 200 பேர்!

பிளேக் நோய் ஆய்வகத்தில் பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு - மருத்துவ கண்காணிப்பில் 200 பேர்!
பிளேக் நோய் ஆய்வகத்தில் பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழப்பு

பெண் ஆராய்ச்சியாளர் இறந்ததற்கு நிமோனியா பாதிப்புதான் காரணம் எனவும், அவரது உடலில் நுண்ணுயிரிகள் எதுவும் இல்லை என்றும் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

பிளேக் நோய் தடுப்பு ஆய்வகத்தில் பணியாற்றிய பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழந்ததையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த 200-க்கும் மேற்பட்டோரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளதாக ரஷ்ய மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், பெண் ஆராய்ச்சியாளர் இறந்ததற்கு நிமோனியா பாதிப்புதான் காரணம் எனவும், அவரது உடலில் நுண்ணுயிரிகள் எதுவும் இல்லை என்றும் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள ஷெலெகோவ் என்ற இடத்தில் அமைந்துள்ள பிளேக் நோய்த் தடுப்பு ஆய்வகத்தில்தான், 28 வயது பெண் ஆராய்ச்சியாளர் பணியாற்றினார். எனினும், இர்குட்ஸ்க் மாறும் ஷெலெகோவ் பகுதிகளில் சுகாதாரச் சூழல் நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய அரசுத் தரப்பு சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ள போதிலும், பிளேக் நோய் பாதிப்பு காரணமாக ஆராய்ச்சியாளர் இறந்திருக்கலாம் என்று உள்ளூர் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக வெவ்வேறு வதந்திகளும் பரவுகின்றன.
இதனால் பல்வேறு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயிரிழந்த ஆராய்ச்சியாளருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், அவர் வசித்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோரை மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும், உயிரிழந்த ஆராயாச்சியாளர் பணியாற்றிய நிறுவனத்துக்கு அருகில் உள்ள அலுமினியத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள், சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த ஆய்வாளர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருந்த சிலரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்ய மருத்துவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முந்தைய செய்தி
Indian banking enters intelligent scale
அடுத்த செய்தி
‘ஆப்டோஜெனெடிக்ஸ்’ விஞ்ஞானிகள் 3 பேருக்கு நோபல் பரிசு

தொடர்புடைய செய்திகள்